உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்காவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-08-19 08:16 GMT   |   Update On 2022-08-19 08:16 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேச்சு
  • ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட போலீஸ் சார்பில் மாதாந் திர குற்ற தடுப்பு கூட்டம் நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு குற்ற வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகா ரிகள், சிறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண் டனர். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பேசியதா வது:-

கஞ்சா, குட்கா புழக்கம் மாவட்டத்தில் அறவே இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் நபரின் வங்கி கணக்குகள், மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்ட நபரின் வீடு சோதனையிடப்பட்டு வழக்குக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட வேண்டும். கஞ்சா, குட்கா எங்கிருந்து பெற்றனர் போன்ற விவரங்கள் சேக ரிக்கப்பட வேண்டும்.

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த விதமான பாரபட்சமும் இருக்கக் கூடாது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபருக்கு சரித்திரபதிவேடு தொடங்கப்பட வேண்டும், ரவுடிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.கந்து வட்டிதொடர்பான வழக்குகளில் உடனுக்குடன் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சட்ட நடவ டிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பதிவுகள் பதிவிடு பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன் லைன் மற்றும் சைபர் மோசடி களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அந்தந்த போலீஸ் நிலை யங்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அலுவல் செய்வதற்கு அனைத்து முன்னேற்பாடு களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News