உள்ளூர் செய்திகள்

டாரஸ் லாரி மோதி கணவன்-மனைவி படுகாயம்

Published On 2023-08-23 07:05 GMT   |   Update On 2023-08-23 07:05 GMT
  • பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
  • குலசேகரம் அருகே இன்று காலை விபத்து

திருவட்டார் :

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலையில் பள்ளி, கல்லூரி வாக னங்கள் செல்லும் போது, தேவிகோடு பகுதியை சேர்ந்த விஜு (வயது 40) தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். திருவரம்பு ரோட்டில் நாகக்கோடு பகுதியில் அவர்கள் வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது.

இதில் இரு சக்கர வாகனம், லாரியின் முன் பக்கத்தில் சிக்கி கொண்டது. விஜூவும் அவரது மனைவியும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அந்தப் பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் டாரஸ் லாரியை மடக்கி பொதுமக்கள் சிறைபிடித்தார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசா ரணை நடத்தினர்.

விபத்து தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், தினமும் காலை, மாலை பள்ளி- கல்லூரி வாகணங்கள் செல்லும் நேரங்களில், கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம் என்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News