உள்ளூர் செய்திகள் (District)

தாக்குதல் சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் புகார்

Published On 2023-03-20 09:30 GMT   |   Update On 2023-03-20 09:30 GMT
  • காவலாளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்
  • இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் மனு

நாகர்கோவில் :

நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 100-க்கும் அதிகமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் நாளில் ஒரு மனு கொடுத்தனர்.

அதில் மாணவர் ஒருவரை, கல்லூரி இரவு காவலாளி தாக்கியதாகவும், இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் கூறிய நிலையில், சில மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அதனை ரத்து செய்ய வேண்டும், காவலாளி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் ஏற்கனவே ஒரு முறை மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பிலும் மனு கொடுக்கப்பட்டது.

ஈத்தாமொழி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தங்கவேல் மனவைி கல்கி, குறைதீர்க்கும் முகாமில் கொடுத்த மனுவில், கணவர் இறந்துவிட்ட பிறகு, சொத்துக்களை தனது மகன் ஏமாற்றி வாங்கிக் கொண்டதாகவும், அதன்பிறகு மருமகளோடு சேர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் கூறி உள்ளார். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து நான் வீட்டை விட்டு வெளியேறி, யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன்.

எனவே நான் வாழும் காலம் வரை எனது வீட்டில் இருந்து வாழவும் வாழ்வாதாரத்திற்கும் மருத்துவ செலவிற்குமான வருமானத்தையும் வாங்கித் தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News