கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கலாம்
- தேவப்பிரசன்னத்தில் தகவல்
- பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும்
கன்னியாகுமரி :
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் ராஜகோ புரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையா கவே இருந்து வருகிறது. அஸ்தி வாரத்தோடு நின்று போன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேவப்பி ரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. திருவனந்த புரத்தை சேர்ந்த சூர்யானந்த் சர்மா, சசிதர சர்மா, நடராஜ அய்யர், பத்மநாப அய்யர் ஆகிய 4 நம்பூதிரிகள் தேவ பிரசன்னம் பார்த்து அருள்வாக்கு சொன்னா ர்கள். மணலிக்கரைமாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ சஜித், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ரா மகிரு ஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, ஜோதீஸ்வரன், நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்கா ணிப்பாளரும், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், திருக்கோவிலூர் மராமத்து பிரிவு பொறி யாளர் ராஜ்குமார், மண்டல ஸ்தபதி செந்தில், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தேவப்பிரசன்னத்தின் போது கேரளநம்பூதிரிகள் வெற்றிலை மூலமும் சோவியை குலுக்கிபோட்டு பார்த்தும் சொன்ன அருள்வாக்கு முழு விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி கடற்கரையில் தவக்கோல த்தில் பகவதி அம்மன் வீற்றிருப்பதால் இந்த கோவில் அதிக சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்கிறது. முனிவர்களும், ரிஷிகளும், மகான்களும், சித்தர்களும் தவசு இருந்து முக்திபெற்ற தலமாகும். திருமணம் முடியாமல் இருக்கும் கன்னி பெண்களுக்கு இந்த கோவிலில் தொடர்ந்து 11 வாரம் சுயவரம் அர்ச்சனை செய்தால் திருமணம் நடக்கும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வருவதற்கு இந்த தலத்தை நாடி வந்தால் வெற்றி கிடைக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்று இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்தால் வேலை உடனடியாக கிடைக்கும்.
இந்த கோவில் தெப்பக்குளம் சீரமைக்கப்ப டாமல் பாழாகி கிடக்கிறது. அதனை உடனடி யாக சீரமைத்து தெப்ப திருவிழாவை ஒழுங்காக நடத்த வேண்டும். இந்த கோவிலின் சன்னதி தெருவில் அமைந்துள்ள பாபநாச தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு அந்த குளத்தில் இருந்து கோவிலுக்கு சுரங்கப்பாதை வழியாக வந்து தான் மேல் சாந்திகளாக இருக்கும் போற்றிமார்கள் அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்த வேண்டும். ஆனால் அந்த பாபநாச தீர்த்தகுளம் இன்று கழிவு பொருட்கள் கலந்து சுத்தம் இல்லாமல் உள்ளது. அதனை உடனடியாக சுத்த ப்படுத்தி மேல் சாந்திகள் அங்கு குளித்துவிட்டு வந்து தான் பூஜை நடத்த வேண்டும்.
கோவிலில் உள்ள கொடிமரத்தில் கீறல் விழுந்து சேதமடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். தங்க கொடிமரம் வைக்கலாம்.
அம்மனின் பஞ்சலோக விக்கிரகங்களில் கால் மற்றும் கை பகுதிகளில் சிறுசிறு கீறல்கள் உள்ளது அதனை மாற்ற வேண்டும். இந்த கோவிலுக்கு ஸ்தல விருச்சமாக கன்னி மூலையில் சந்தன மரம் நட வேண்டும். கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும். மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும்பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம்.
இவ்வாறு தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.