உள்ளூர் செய்திகள்

நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது

Published On 2022-08-21 07:36 GMT   |   Update On 2022-08-21 07:36 GMT
  • நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
  • இன்று ஆவணி முதல் ஞாயிறு

நாகர்கோவில்:

நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது.

இந்தக் கோவிலில் நாகர் சிலைகளுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பால் ஊற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் திரும ணங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந் தது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நாகராஜரை தரிசித்தனர்.

அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வருகை தந்திருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. கோவில் நுழைவு வாயிலை விட்டு வெளியே நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் நின்றனர். பல மணி நேரம் காத்து நின்று நாகராஜரை தரிசனம் செய்தனர்.

கோவிலுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து பக்தர்கள் நாகராஜா திடலில் இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்திவிட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர். நாக ராஜா திடலில் திருவி ழாக்கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது.

அதில் குழந்தைகளுக் கான பலூன் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்க ளுக்கு வசதியாக பாக்கெட் பால்களும், மஞ்சள் பொடி யும் விற்பனை செய்யப்பட் டது. கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்திருந்தது. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

வழக்கமாக நாகராஜா கோவிலில் மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிலுள்ள 26 கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

Tags:    

Similar News