உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ரூ.135 ஆக உயர்ந்தது

Published On 2023-07-16 06:57 GMT   |   Update On 2023-07-16 06:57 GMT
  • ஒரு கிலோ இஞ்சி இன்று மார்க்கெட்டில் கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்டது
  • மிளகாயின் விலையும் கடந்த ஒரு மாதமாக விலை குறையாமல் உள்ளது. இன்று ரூ.140-க்கு விற்கப்பட்டது

நாகர்கோவில் :

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொருட்களை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வழக்கமாக தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், இஞ்சி வகைகளை கிலோ கணக்கில் வாங்கி வந்த நிலையில் தற்போது கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இவற்றின் விலைகள் 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது தான் காரணமாகும்.

குறிப்பாக தக்காளியின் விலை தினமும் ஏறுமுகமாக இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த 2 நாட்களாக நாகர்கோவில் மார்க்கெட்டு களில் ரூ.120-க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று தக்காளி விலை மேலும் ரூ.15 உயர்ந்து ரூ.135-க்கு விற்கப்படு கிறது. இதேபோல் இஞ்சியின் விலையும் நாளுக்கு நாள் ஏறுமுகமாகவே உள்ளது. ஒரு கிலோ இஞ்சி இன்று மார்க்கெட்டில் கிலோ ரூ.350-க்கு விற்கப்பட்டது. பூண்டுவின் விலை ரூ.200-ஐ தொட்டது. சின்ன வெங்காயம் ரூ.200 முதல் 210 வரை விற்பனையானது. மிளகாயின் விலையும் கடந்த ஒரு மாதமாக விலை குறையாமல் உள்ளது. இன்று ரூ.140-க்கு விற்கப்பட்டது. இதேபோல் நாட்டு கத்தரிக்காய் கிலோ ரூ.80, வரி கத்தரிக்காய் ரூ.60, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, தடியங்காய் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.40, வழுதலங்காய் ரூ.60, பல்லாரி ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.30-க்கு விற்கப்பட்டது. காய்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணம் காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டன்சத்திரம், மேட்டு ப்பாளையம், ஓசூர், பெங்களூர் பகுதியிலிருந்து அதிகளவு காய்கறிகள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள் ளது. தக்காளி வரத்து குறைவாக உள்ளது.

இதனால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் ரூ.3000 முதல் ரூ.3500-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், காய்கறிகள் உள்ளூர், வெளி யூர்களில் இருந்தும் குறைவான அளவில் வருவதால் விலை அதிகரித்து வருகிறது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்றார்.

இல்லத்தரசிகள் கூறுகையில், வழக்கமாக காய்கறிகள் வாங்க ரூ.200 கொண்டு வந்தால் அதிகம் வாங்கி செல்லலாம்.

தற்பொழுது காய்கறிகள் குறைவாகவே கிடைக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக தக்காளி, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து ள்ளோம். இருப்பினும் வழக்க மாக வாங்கக்கூடிய காய்கறி களுக்கு செலவு செய்யும் பணத்தை விட கூடுதலாக செலவாகி விடுகிறது என்றனர்.

Tags:    

Similar News