உள்ளூர் செய்திகள்

முத்தலக்குறிச்சி பகுதியில் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வெறிநாய்களை பிடிக்க வேண்டும்

Published On 2022-08-06 07:42 GMT   |   Update On 2022-08-06 07:42 GMT
  • மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
  • கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி:

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியை கரோலின் கீதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கனகராஜ் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

பெற்றோர்கள் சார்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி சிந்தியா, நிர்மலா, ஷைலஜா உள்ளிட்டோர் மாணவர் நலன்சார் கருத்துகளை முன்வைத்து பேசினர். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முத்தலக்குறிச்சி மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் ஒருவித அச்ச உணர்வுடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அவசரமாக தலையிட்டு இப்பகுதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News