ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்
- கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு
- ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் திங்கள்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருகிறார்கள். திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.
குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கமோகன், பொன்ராஜா, இளங்கோ, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழி லாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலவதியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரப்பர் கழக நிர்வா கம் இதுவரை அமல்படுத்த வில்லை.
எனவே ஊதிய உயர்வை நிலுவை தொகை யுடன் உடனே வழங்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால் தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை.
எனவே தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டு றவு நூற்பாலையில் வெளி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணியில் அமர்த்த ஆலை நிர்வாக முடிவு செய் துள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.