மண்டைக்காடு பேரூராட்சியில் இரவு வரை நீடித்த உள்ளிருப்பு போராட்டம்
- 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
- எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு
மணவாளக்குறிச்சி :
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்து 20 மாதங்கள் ஆகிறது. 20 மாதங்கள் ஆகியும் மண்டைக்காடு பேரூராட்சி வார்டுகளில் எந்த வேலையும் நடக்க வில்லை என தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்ற னர்.
இந்நிலையில் பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி தலைமையில் துணை தலைவர் சுஜி, கவுன்சி லர்கள் முருகன், கிருஷ்ண ஜெயந்தி, விஜயலெட்சுமி, ரமேஷ், ஜெயந்தி, ஆன்ற லின் ஷோபா, லோபிஸ், உதயகுமார், சோணி ஆகிய 11 பேர் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாலை அலுவலக நேரம் முடிந்தும் அவர்கள் எழுந்து செல்லவில்லை.
இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. செயல் அலு வலர் கலாராணி பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இரவு 10 மணி வரை இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், அலுவலக அதிகாரிகள் தொலைபேசி மூலமாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு உபகரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், வார்டுகளில் முக்கிய இடங்களில் நாளை (இன்று) விளக்குப்போடப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.