உள்ளூர் செய்திகள்

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு சரிவு

Published On 2023-08-06 07:02 GMT   |   Update On 2023-08-06 07:02 GMT
  • பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
  • திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. வழக்கமான அளவை காட்டிலும் 65 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. மழை குறைந்ததையடுத்து நீர் நிலைகளிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பேச்சிபாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 27.57 அடியாக இருந்தது. அணைக்கு 312 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 681 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக வெளி யேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே கன்னி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையடுத்து பேச்சிப் பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சானலில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரை விட கூடுதல் அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

பெருஞ்சாணி அணை யின் நீர்மட்டம் இன்று காலை 24.65 அடியாக இருந்தது. அணைக்கு 24 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 11.1 அடியாகவும் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பாசன குளங்களிலும் தண்ணீர் வற்ற தொடங்கி யுள்ளது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களில் ஒரு சில குளங்களில் மட்டுமே தண்ணீர் முழு கொள்ள ளவில் உள்ளது.

75 சதவீ தத்திற்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. அணைகளிலும், குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News