உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2022-08-08 08:02 GMT   |   Update On 2022-08-08 08:02 GMT
  • தஞ்சாவூர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
  • செப்டம்பர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவில்:

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும்.

விநாயகர் சதுர்த்தி விழா குமரி மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரு கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் ஊர்வலங்கள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயா ராகி வருகிறது.

இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா உள்பட இந்த அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தயாராகி வருகின்றன.வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் ஏற்பாடுகள் செய்து வரு கிறார்கள். இந்து முன் னணி சார்பில் வழக்க மாக இரணியல் அருகே கண்ணாட்டு விளை பகுதி யில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கண்ணாட்டு விளை பகுதி யில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படவில்லை. திருச்செந்தூரில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்ய ஏற்பா டுகள் செய்துள்ளனர். இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நாகர்கோவில் அருகே சூரங்குடி பகுதியில் நடந்து வருகிறது.

கடந்த நான்கு மாதங்களாக விநாயகர் சிலை செய்யும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டு ள்ளனர். தஞ்சாவூரிலிருந்து வந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ½ அடி முதல் 7½ அடி உயரத்திற்கு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த விநாயகர் சிலைகள் இறுதி கட்டத்தை எட்டுமென்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து வர்ணங்கள் தீட்டப்படும்.விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்ட பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.வெளி மாவட்டங்களில் இருந்து தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பிரதிஷ்டை செய்யப் படும் விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். விநாயகர் சிலைகளை மூன்று நாட் கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநா யகர் சிலைகள் ஊர்வ லமாக எடுத்துச் செல்லப் பட்டு கன்னியாகுமரி கடல், சங்குத்துறை கடல், குழித்துறை தாமிரபரணி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News