உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Published On 2023-07-02 07:23 GMT   |   Update On 2023-07-02 07:23 GMT
  • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
  • சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை முடிந்ததாலும், பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் ஞாயிற்று க்கி ழமை விடுமுறை யை யொட்டிஇன்று கன்னியா குமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலாபயணிகள் படகுத்து றையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்ட பம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம், பாரதமாதா கோவில், கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டைபீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. பலத்தபோலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்புகுழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியில் உள்ள கோவில்கள்,தேவாலயங்கள், மசூதிகள் போன்றவற்றிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

Tags:    

Similar News