மணவாளக்குறிச்சியில் இருந்து பறக்கும் வேல் காவடி 21-ந்தேதி திருச்செந்தூர் புறப்பட்டு செல்கிறது
- வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி
- மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்படும்
கன்னியாகுமரி :
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி விழாக்கள் (இன்று) 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடை பெற்றது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடக்கிறது. 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னி சையும், மாலை 5.30 மணிக்கு நையாண்டி மேளமும், மாலை 6 மணிக்கு வேல் தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், இரவு 8.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு காவடி அலங்காரமும் நடக்கிறது.
21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 7 மணிக்கு தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடக்கிறது.
மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவா ளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் செல்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.