உள்ளூர் செய்திகள் (District)

கன்னியாகுமரி அருகே 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2022-09-20 09:09 GMT   |   Update On 2022-09-20 09:31 GMT
  • மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • விற்பனைக்காக வைத்துஇருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு புதிதாக நான்கு வழி சாலை பணி நடைபெறும் ஒதுக்குப்புறத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த வாலிபரின் பெயர் ஸ்ரீனிவாசன் (வயது 24) என்பதும், கன்னியாகுமரி அருகே உள்ள மாதவரபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர் விற்பனைக்காக வைத்துஇருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News