உள்ளூர் செய்திகள் (District)

களியக்காவிளை அருகே 16 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது - கேரளாவிற்கு கொண்டு சென்றபோது சிக்கினார்

Published On 2022-08-25 07:05 GMT   |   Update On 2022-08-25 07:05 GMT
  • கடந்த 25 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
  • கிரிலால் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக களியக்காவிளைக்கு கொண்டு வந்ததாக கூறினார்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத் தப்பட்டு வருகிறது.

கடந்த 25 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும் வெளி மாநிலங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயிலில் கொண்டு வந்த 12 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோட்டார் பகுதியில் கஞ்சா வைத் திருந்த 4 பேரை நேற்றிரவு போலீசார் பிடித்தனர்.பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கேரளா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையிலான போலீசார் களியக்காவிளை அருகே இஞ்சிவிளை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலம் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிரி லால் (வயது 37) என்பது தெரியவந்தது. அவர்கையில் இருந்த பேக்கை போலீசார் சோதனை செய்தபோது 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட கிரிலாலை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிரிலால் கஞ்சாவை ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக களியக்காவிளைக்கு கொண்டு வந்ததாக கூறினார். களியக்காவிளைலிருந்து இஞ்சிவிளை வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

போலீசார் கிரிலாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News