மார்த்தாண்டம் அருகே பெண் தபால் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்த தொழிலாளி
- பொதுமக்கள் பிடித்து போலீசில ஒப்படைத்தனர்
- தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது44). இவர் நட்டாலம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தபால் நிலையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மாமூட்டுகடை - பாண்டியன் விளைச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெட்டி யான்விளை பகுதியில் வைத்து, லேகாவின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்த மர்ம நபர், திடீரென அவரது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லேகாகத்தி கூச்சலிட்டுள்ளார்.
உடனே உஷாரான அந்த மர்மநபர், லேகாவின் கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கத்தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென் றுள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை துரத்தி பிடித்தனர்.
பின்பு அவருக்கு தர்ம அடி கொடுத்து மார்த்தாண் டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐரேனிபுரம் ஆரியூர் கோணம் சங்கர்(33) என்பதும், மரவேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பறித்த தாலி செயினை பொதுமக்கள் துரத்திய போது அங்கு ஒரு தோப்பில் வீசி விட்டதாக தெரி வித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் தூக்கி வீசப்பட்ட தாலி செயினை தேடி வருகின்றனர் .