உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி லூர்து மாதா தெருவில் ரூ.10 லட்சம் செலவில் தடுப்புச்சுவருடன் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

Published On 2023-10-13 14:28 GMT   |   Update On 2023-10-13 14:28 GMT
  • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
  • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News