இன்று முதல் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
- நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்
- மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிவசேனா, இந்து மகா சபா, இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவ சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காலையில் டெம்போக்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக் கப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவிலில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித் துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தையடுத்து முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். நாளை (23-ந்தேதி) இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள விநாயகர் சிலைகளும், நாளை மறுநாள் (24-ந்தேதி) இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.