குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன்
- கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது.
- கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாவானது கடந்த 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்டது. இந்த கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது. மேலும் 282 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ரூ.1.28 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.
திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம் சங்கத்தின் செயலாட்சியர் லீலா கூட்டுறவு சார்பதிவாளரால் பெறப்பட்டது.