உள்ளூர் செய்திகள்

தோவாளையில் கட்டப்பட்டு வரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்படும்

Published On 2023-05-05 08:21 GMT   |   Update On 2023-05-05 08:21 GMT
  • செய்தி துறை செயலாளர் தகவல்
  • மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கன்னியாகுமரி:

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மண்டப உள் அரங்கினை ஆரோக்கியமான பயன்பாடுகளுக்கு கொண்டுவர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து, பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்ட பத்தினை ஆய்வு மேற் கொண்டு மண்டபத்தில் பழுத டைந்துள்ள பகுதிகள் புதிதாக சீரமைக்கப்பட்டதை பார்வையிட்டு, மண்டபத்தில் உள்புறம் பொதுவுடமை வீரர் ப.ஜீவா னந்தத்தின் அரியவகை புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்திட அறிவுறுத்தினார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபத்தினை ஆய்வு மேற்கொண்டு, மண்டபத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதை சீரமைத்திட பொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

மேலும், தோவாளை பகுதியில் ரூ.92.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் விரைவில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

ஆய்வுகளில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின் பிரபு, வட்டாட்சி யர்கள் ராஜேஷ், வினை தீர்த்தான், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News