உள்ளூர் செய்திகள்

விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-03-05 09:33 GMT   |   Update On 2023-03-05 09:33 GMT
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்-அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்பு

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று.

கேரள பெண் பக்தர் கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடு வதால் இக்கோவில் பெண் களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடி யேற்றினார்.

இதில் தெலுங் கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், பேரூராட்சி தலைவர்கள் ராணிஜெயந்தி, பாலசுப்ரமணியன், குட்டி ராஜன், செயல் அலுவலர் கலாராணி, கவுன்சிலர்கள் முருகன், கிருஷ்ணஜெயந்தி, ஜெயலட்சுமி, ராபர்ட் கிளாரன்ஸ், ஆன்றலின் சோபா, சோனி, உதயகுமார், ஒன்றிய தி.மு.க.செயலாளர் சுரேந்திரகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர் கான், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.

தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடி யேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி சிறப்பு ரை ஆற்றினார். மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பா ளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் டாக்டர் தெய்வபிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

குமரி மாவட்ட திருக் கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், தேவசம் கண்காணிப்பளர் ஆனந்த், கோயில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார், மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்தி லிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை யும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது

Tags:    

Similar News