நாகர்.கலெக்டர் அலுவலகத்தில் இன்று திட்டக்குழு தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்களித்தனர்
- பலத்த போலீஸ் பாதுகாப்பு
- 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12 பதவிக்கு 42 பேர் களத்தில் உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி பதவிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்கு 7 உறுப்பினர்களை குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி யில் உள்ள 98 வார்டு உறுப்பினர்கள், 51 பேரூராட்சியில் உள்ள 826 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்வார்கள். இதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங் கத்திலும், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலக கட்டிட முதல் மாடியில் அமைந்து உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது.
மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவல கத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் 51 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் வாக்குகளை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் 3 பேர் வாக்களிக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது.
வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், குளச்சல், பத்ம நாபபுரம், கொல்லங்கோடு, குழித்துறை நகராட்சி மற்றும் 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும் நாஞ்சில் கூட்டரங்கத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்களிக்க வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களுக்கான அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்தனர்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் 5 வாக்குகளும், மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 7 வாக்குகளையும் செலுத்தினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடக்கிறது.வாக்கு பதிவு மையத்திற்குள் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வாக்கு பதிவு முடிந்ததும் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்தின் முதல் மாடியில் அமைந் துள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கத்தில் வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு வெற்றி பெற்றவர்கள் விபரம் தெரியவரும். திட்டக்குழு தேர்தல் நடைபெற்றதை யடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.