உள்ளூர் செய்திகள்

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு

Published On 2023-05-05 08:26 GMT   |   Update On 2023-05-05 08:26 GMT
  • வியாபாரிகள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு
  • இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி:

திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியா பாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க பட்டதாகவும், வியாபாரிகள் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப் பட்டது. நேற்று மதியம் பேரூராட்சி செயல் அலுவ லர் அம்புஜம் தலைமையில் இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வில்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது.

இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனால் இப்பகுதி யின் பரபரப்பு ஏற்பட்டது. அப்புறப்படுத்த பட்ட பொருட்கள் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

Tags:    

Similar News