உள்ளூர் செய்திகள்

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள புகை மண்டலம்.

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள புகை மண்டலத்தால் வீடுகளை காலி செய்யும் பொதுமக்கள்

Published On 2023-03-02 08:04 GMT   |   Update On 2023-03-02 08:04 GMT
3-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்

கன்னியாகுமாரி:

நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது.இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதை யடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணி யில் ஈடு பட்டனர்.

தீ விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.தீய ணைப்பு வீரர்கள் தீய ணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டே உள்ளது. நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். இருப்பினும் தீ கட்டுப்படுத்த முடிய வில்லை.

இன்று காலையில் 3-வது நாளாக தீ அணைக்கும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் கன்னியாகுமரி திங்கள் சந்தை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தீ எரிந்து கொண்டே உள்ளது. காற்று வேகமாக வீசுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

புகை மண்டலத்தின் காரணமாக இன்று 3-வது நாளாக அந்த பகுதியில் உள்ள சாலையில் பொதுமக்கள் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருவதையடுத்து பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வலம்புரிவிளை குப்பை கிடங்கையொட்டி உள்ள பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு அவர்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

புகை மண்டலத்தின் காரணமாக குழந்தைகள் பெரியவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருமே பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் வலம்புரி விளையில் முகாமிட்டு தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் உதவிகர மாக உள்ளனர் .

அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு புகை மண்டலத் தின் காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்றும் புகை மண்டலமாக அந்த பகுதி காட்சி அளித்தது. மாணவ- மாணவிகள் நலன் கருதி இன்றும், பள்ளிக்கு விடு முறை விடப்பட்டது.

இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி உள்ள னர்.

Tags:    

Similar News