உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் நடந்த பரிவேட்டை ஊர்வலத்தில் பகவதி அம்மனுக்கு விவேகானந்தா கேந்திரம் சார்பில் வரவேற்பு
- எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வழிபட்டனர்
- மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் பரிவேட்டை நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் தேங்காய், பழம் படைத்து சுருள் வைத்தும் வழிபட்டனர்.
விவேகானந்தபுரம் சந்திப்பில் ஊர்வலம் வந்த போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா சார்பில் பகவதி அம்மனுக்கு, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் கேந்திர ஆயுட்கால ஊழியர்கள், கேந்திர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.