காரைக்கால் அமைச்சர், எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கோஷ்டி மோதலில் மேலும் 8 பேர் மீது போலீசார் வழக்கு
- இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
- போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.