உள்ளூர் செய்திகள் (District)

கராத்தே போட்டியில் தருமபுரி செந்தில் பள்ளி முதலிடம் பெற்று சாதனை

Published On 2023-07-26 10:13 GMT   |   Update On 2023-07-26 10:13 GMT
  • சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
  • பயிற்சி அளித்த கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தருமபுரி,  

கடந்த 23-ந் தேதி சேலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிநடந்தது.இதில் அனைத்து நாடுகளிலிருந்தும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி தீபிகா, 6-ம் வகுப்பு மாணவன் நடராஜ், 11-ம் வகுப்பு மாணவன் தீபக் ஆகியோர் தனிநபர் கராத்தே பிரிவில் கலந்து கொண்டு முதலிடமும், 4-ம் வகுப்பு மாணவன் பேட்ரி மிராக்கல் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளிக்கும், மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செந்தில் கந்தசாமி, மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகரன், நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளி முதல்வர் வள்ளியம்மாள், துணை முதல்வர் கவிதா, பிரைமரி மேற்பார்வை யாளர் கல்பனா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

சாதனை படைத்த மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்த தென்னிந்திய கராத்தே டூ அசோசியேசன் தலைவரும் பயிற்சியாளருமான கிராண்ட் மாஸ்டர் கியோஷி நடராஜை பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News