உள்ளூர் செய்திகள்

மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்.

கார்த்திகை பிறந்தது; அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்

Published On 2022-11-17 10:00 GMT   |   Update On 2022-11-17 10:00 GMT
  • அய்யப்ப பக்தர்கள் தங்கள் குருசாமியிடம் மாலை அணிந்து விரதம்.
  • பக்தர்கள் கருப்பு வேஷ்டி அணிந்தும் விரதம்.

பூதலூர்:

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் எங்கும் ஐயப்ப பக்தர்களின் மாலை அணிவதிலும் சரண கோஷமும் நிறைந்து காணப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் 48 நாள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை செல்வதைபிரதானமாக கருதுகின்றனர்.

கார்த்திகை முதல் நாள் பல்வேறு கோவில்களிலும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் குருசாமி இடம் மாலை அணிந்து விரதத்தை துவக்கினார்கள்.

தஞ்சை மாவட்டம் வடக்குபூதலூர் ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள ஆனந்த காவேரியில் குளித்து ஆனந்த விநாயகர் ஆல யத்தில் மாலை அணிந்து கொண்டனர்.

ஐயப்ப குருசாமி தங்கமணி சாமிகள் ஸ்ரீ ஆனந்த விநாயகருக்கு, ஐயப்பனுக்கு ஆராதனைகள் செய்த பின்னர் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடக்கி வைத்தார்.

திரளான ஐயப்ப பக்தர்கள் கருப்பு வேஷ்டி அணிந்தும், காவி வேஷ்டி அணிந்தும்தங்களுடைய விரதத்தை தொடங்கினார்கள். ஐயப்பன் குருசாமி தங்கமணி சாமிகளுடன் அப்பாராசுசாமிகள மற்றும் குருசாமிகள், கன்னிசாமிகள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

Tags:    

Similar News