கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு செஞ்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.
நிகழ்ச்சியில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு துறை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் பாலமுருகன், நடராசன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார் வல்லம் அமுதா ரவிக்குமார் ,மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் ,ஒலக்கூர் சொக்கலிங்கம் திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்தி ரன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அகிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான், பேரூ ராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.