- வேலாயுதம் பாளையம் அருகே வேன் கவிழ்ந்து 23 ேபர் காயம் அடைந்தனர்
- கோவிலுக்கு ெசன்ற போது சம்பவம் நிகழ்ந்தது
வேலாயுதம்பாளையம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் 22 பேர் ஆம்னி வேனில் தேனி மாவட்டத்தில் உள்ள வருநாடு கருப்ப்ணசாமி கோவிலுக்கு சென்றனர்.பின்னர் அங்கு சாமி கும்பிடு விட்டு அதே வேனில் நேற்று ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.அந்த வேனை தருமபுரி சாமி ரெட்டிபட்டி எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 28). என்பவர் ஓட்டி வந்தார்.கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்துறை- தவுட்டுப்பாளையம் மேம்பாலத்தில் அந்த வேன் வந்து கொண்டிருந்தது.அந்த நேரத்தில் கனமழையின் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலத்திற்கு முன்பாக மழை நீர் தேங்கி இருந்தது. அப்போது முன்னாள் சென்ற கார் ஒன்று திடீரென்று இஞ்சின் ஆப் ஆகி நின்று விட்டது.இதனால் வேன், காரின் மீது மோதால் இருப்பதற்காக சசிகுமார் வேனை நிறுத்தினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் இடது புறமாக தலைகுப்புற கவிழ்தது.இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சமபவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் வேனில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 22 பேரை மீட்டனர்.இதில் பென்னாகரம் அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமி (55), பென்னாகரம் தோளூர் பகுதியை சேர்ந்த ருத்ரம்மாள் (50), கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த சரத்குமார் (27), அவரது மனைவி ஷோபனா (26), அதே பகுதியை சேர்ந்த மாரம்மாள் (45) ஆகியோரை உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது