உள்ளூர் செய்திகள்
கரூரில் அனுமதியின்றி மது விற்ற 7 பேர் கைது
- கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
- இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியன்றி மது விற்ற 7 பேரை கைது செய்தனர்.
கரூர் :
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மலர், ரவி, தங்கராசு, மாரியம்மாள், மணி, சண்முகம், ராமச்சந்திரன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.