வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
- வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது
கரூர்
மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.