உள்ளூர் செய்திகள்

திருட்டு கும்பலுடன் வந்து சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர்

Published On 2023-10-12 07:11 GMT   |   Update On 2023-10-12 07:11 GMT
  • கரூர் நொய்யல் பகுதியில் திருட்டு கும்பலுடன் வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்
  • போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், நொய்யல் குந்தாணி பாளையம் பாதகாளியம்மன் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரது வீட்டில் 3 நபர்கள் வீட்டிற்கு உள்ளே புகுந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தோட்டத்தி லிருந்த பிரிதிவிராஜ் குடும்பத்தினர் சத்தம் போடவும் வந்த 3 பேரில் 2 பேர் கம்பிவேலியைத் தாண்டி க்கொண்டு தப்பியோ டிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

அவர் வேலாயுத ம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுரை மாவ ட்டம் நாகாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் என்பதும் தெரியவந்தது. இவர் மதுரையிலிருந்து பழநி சென்று பின் அங்கிருந்து கரூர் வந்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து சாந்திவனம் நிர்வாகத்திற்கு, சப் - இன்ஸ்பெக்டர் ரெங்க ராஜிடம் தகவல் தெரிவித்தார். சாந்திவனம் மீட்புக்குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் சித்ரா மற்றும் ஓட்டுநர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மனநலம் பாதிக்க ப்பட்டவரை அழைத்து சென்று, திருச்சி தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, ஆத்மா மனநல மருத்துவமனையின் இயக்குநரும், சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் பொதுக்குழு உறுப்பினரும், மனநல மருத்துவருமான டாக்டர் ஸ்ரீதர் அந்நபரை பரிசோதித்து மனநல சிகிச்சை அளித்து வருகிறார்.

Tags:    

Similar News