நகரங்களை தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் -கலெக்டர் வேண்டுகோள்
- நகரங்களை தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பல்வேறு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக
கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடந்த தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக பள்ளி மாணவர்களிடையே தூய்மைப் பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் த.பிரபுசங்கர் பேசியதாவது, தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தூய்மை இயக்கத்தினை பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயல்படுத்துவதன் மூலம் ஆரம்ப காலத்திலேயே தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும். நெகிழி பயன்பாட்டை தடுத்து மஞ்சப்பை அவசியத் தை ஏற்படுத்த வேண்டும்.
திடக்கழிவுகள் மக்கும் குப்பை, மக்கா குப்பையினை பிரித்து எடுத்து களப்பணி ஏற்படுத்து வதற்காக வழிமுறைகளை மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அவ்வாறு சிறப்பாக தூய்மை விழிப்புணர்வு பணியினை ஏற்படத்தும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தவேண்டும்.
இவ்வாறு தூய்மையாக வைப்பதால் டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் பரவாமல் தடுக்கலாம். எனவே எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகத்தை உணர்ந்து செயல்பட்டு நமது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து அதன் மூலம் நகரங்களை தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கோபாலகிரு ஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.