உள்ளூர் செய்திகள்

வெள்ளரிக்காய் கிலோ ரூ. 50க்கு விற்பனை

Published On 2023-03-11 08:03 GMT   |   Update On 2023-03-11 08:03 GMT
  • மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் விலையேற்றம்
  • இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால், வெள்ளரி க்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை

கரூர்,

கரூர் மாவட்டத்தில், வெள்ளரிக்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை. இதனால், புதுக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து,கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மார்க்கெட்டுக்கு வெள்ளரிக்காய் விற்பனைக்கு வருகிறது. கோடைகாலம் தொடங்கிய நிலையில், கரூருக்கு வெள்ளரிக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, கரூரை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால், வெள்ளரி க்காய் சாகுபடி அதிக அளவில் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், டிசம்பர்மாதம் வரை மழை பெய்ததால், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், வெள்ளரிக்காய் சாகு படி செய்யப்பட்டது. கோடைகாலத்தை யொட்டி கடந்த மாதம், அறுவடை துவங்கியது. ஆனால், விளைச்சல் குறைவால், உள்ளூர் தேவைக்காக, வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்படுகிறது.புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்டங்களில் இருந்தும் வெள்ளரிக்காய் வர வில்லை. தற்போது காய்கள் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கரூருக்கு வருகிறது. அதில், வரும் வெள்ளரிக்காய்தான் தற்போது, கரூரில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம், ஒரு கிலோ வெள்ளரிக்காய், 30 ரூபாய் முதல், 35 ரூபாய் வரை விற்றது. வரத்து குறைவால், தற்போது ஒரு கிலோ வெள்ளரிக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News