அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
- அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது.
- முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றுது
கரூர்:
கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினிரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு பிரிவு, தேசிய மாணவர் படை பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக கலந்தாய்வை கல்லூரி முதல்வர் கௌசலயாதேவி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் சான்றிதழை பேராசிரியர்கள் சரிபார்த்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குறித்து முதல்வர் கௌசல்யா தேவி கூறும்போது,
முதல்நாள் சிறப்பு ஒதுக்கீட்டில் ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு 3 இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 6 இடங்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 64 இடங்கள், விளையாட்டு பிரிவில் 38 இடங்கள், தேசிய மாணவர் படையினருக்கு ஒரு இடம், அந்தமான் -நிகோபார் தீவை சேர்ந்தவர்களுக்கு 2 இடங்கள் என மொத்தம் 114 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
தொடர்ந்து நாளை (10-ந் தேதி) இளங்கலை தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவுகளுக்கும், 11-ந் தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பரிவுகளுக்கும், 13-ந் தேதி இளங்கலை வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 16-ந் தேதி இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், புவி அமைப்பியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.