உள்ளூர் செய்திகள் (District)

கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை

Published On 2023-07-09 06:49 GMT   |   Update On 2023-07-09 06:49 GMT
  • கரூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை படைத்தனர்
  • மொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையில் 30 மாணவிகள் சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2 நாள் நடைபெற்ற விழிப்புணர்வு நாள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 180-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வெவ்வேறு விதமான தலைப்புகளில் ஆய்வு செய்து கட்டுரைகளை விளக்கினர்.

அதில் சிறந்த ஆய்விற்கான முதல் பரிசு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் பூமிகா, ரிலானா சாகின், ஆர்த்தி, சாரதி மற்றும் 2-ம் பரிசு மகேஷ்வரி, திலகவதி, பிருந்தாவனம், லோகப்பிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதில் சிறந்த ஆய்வு மற்றும் ஆய்வு கட்டுரைக்கான ஒட்டுமொத்த செயல்முறைக்கான முதலிடம் மற்றும் இரண்டாமிடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கிடைத்துள்ளது.

இக்கருத்தரங்கில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சாந்தி, துறைப் பேராசிரியர்கள் கவிப்பிரியா, சாலினி மற்றும் ராபிகா ஆகியோரும் கலந்து கொண்டனர். பரிசு வென்ற மாணவ, மாணவிகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரூம் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன், கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News