நொய்யல் அருகே - வெவ்வேறு விபத்தில் 2 முதியவர்கள் படுகாயம்
- மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
- அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 60). விவசாயி.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பின்பு வீட்டிற்கு வருவதற்காக ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அதே சாலையில் அவருக்கு பின்னால் வந்த ஈரோடு மாவட்டம் நொச்சிபா ளையம்
சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்( 25 ) என்பவர் மோட்டார் பைக்கை அதிகமாக ஓட்டி வந்து பொன்னுசாமி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் நிலை தடுமாறி பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . அதை பார்த்த அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வேலாயு தம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் விபத்து ஏற்படுத்திய தினேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் சாலை ஓரமாக நடந்து சென்ற முதியவர் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவ ழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இது குறித்து வேட்ட மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகே சன் வேலாயு தம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோட்டார் சைக்கிளை அதிகமாக ஓட்டி சென்று முதியவர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கோம்புப்பாளையம் பகுதி யை சேர்ந்த குருசாமி (வயது 70) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.