நீட், ஜே.இ.இ. தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை
- கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது.
- விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.
கரூர் :
கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பரணி வித்யாலயா பள்ளி மாணவர் முகேஷ் 99.6 சதவீதமும், 636 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.
மாணவி சிந்துஜா 99.5 சதவீதமும், 630 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.
நீட் தேர்வில் தேசிய அளவில் அபார சாதனை படைத்த மாணவர் முகேஷ், மாணவி சிந்துஜாவின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் குரோத் அகாடமி பயிற்சி மைய ஆசிரியர்கள் ஆகியோரை பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா ராமசுப்பிரமணியன், துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.