தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு
- தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
- தவறான சிகிச்சையால் கால் அகற்றம்
கரூர்:
கரூரில் தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்
இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த மேரிஜூவிட்சிலா என்பவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை பிரச்சனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். அங்குள்ள, டாக்டர் எனக்கு கடந்த 4 தேதி, கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்தார்.
அதபிறகு, வலது காலில் தொடர்ந்து வலி இருந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவவனையில் மேல் சிகிச்சை பெற்றேன். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் காலில் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்து, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம், அந்த காலை அகற்றினர்.
கரூரில் உள்ள தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாகவே ஒரு காலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை தொடர் பான ஆவணங்களை கேட்டபோது, கொடுக்காமல், இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே, தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.