அரசு பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
- அரசு பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாணிக்கம் எம். எல். ஏ. பங்கேற்பு
கரூர்:
தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, குளித்தலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மாணிக்கம், கோட்டாட்சியர் புஷ்பாதேவி, டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். டி எஸ் பி ஸ்ரீதர், கோட்டாட்சியர் புஷ்பாதேவி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் என்னென்ன நிலைகளில் உள்ளது, பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினர்,
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசன், நகர திமுக பொருளாளர் தமிழரசன், அரசு வழக்கறிஞர் சாகுல்ஹமீது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.