குளித்தலை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பிளஸ்-1 மாணவி
- குளித்தலை அருகே பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார்
- மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி பகுதி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராசு, கலைவாணி. இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா(வயது 16) ஆகிய இரண்டு மகள்கள். இதில் இளைய மகள் தேவிகா பிளஸ்-1 படித்து வந்தார். தந்தை தங்கராசு சுமார் 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவாத கூறப்படுகிறது,இந்நிலையில் வீட்டில் இருந்த தேவிகா காணவில்லை.
பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கிருஷ்ணவேணி புகார் செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தேவிகா ஊருக்கு அருகாமையில் உள்ள விவசாய பாசன கிணற்றில் பிணமாக மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, இதனை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் எனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவிகாவை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருப்பார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர், மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.