உள்ளூர் செய்திகள் (District)

காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு

Published On 2022-07-06 08:28 GMT   |   Update On 2022-07-06 08:28 GMT
  • காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்
  • கலெக்டரிடமும் வாழ்த்து பெற்றனர்

கரூர்:

காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காச நோய் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவில் காசநோய் கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருவதுடன் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறது.

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மருத்துவர் அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைந்து உள்ளது. இதனை பாராட்டும் வகையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கரூர் மாவட்ட காசநோய் பிரிவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இதையடுத்து கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரை, கரூர் மாவட்ட காசநோய் குழு சந்தித்து பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, இனிவரும் காலங்களில் மருத்துவர் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைத்து காசநோய் இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்றார்.

Tags:    

Similar News