உள்ளூர் செய்திகள்

சமுதாய நலனுக்காகவே தண்டனை விதிக்கப்படுகிறது - நீதிபதி பேச்சு

Published On 2022-11-19 09:43 GMT   |   Update On 2022-11-19 09:43 GMT
  • சமுதாய நலனுக்காகவே தண்டனை விதிக்கப்படுகிறது என்று கரூர் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்தார்.
  • பழிவாங்கும் எண்ணம் கூடாது

கரூர்:

பொதுநூலகத்துறை 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நற்சிந்தனையூட்டும் நூல்கள் பரிசு வழங்கும் நிகழ்வு கருர் கிளை சிறையில் நடைபெற்றது.

வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற் றார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் தலைமை குற்றவி யல் நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்து, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற சிறை வாசிகளுக்கு நூல்கள் பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

சிறைச்சாலை என்பது தண்டனைக்கான இடம் அல்ல. சீர்திருத்தம் செய்வதற்காத்தான். நீங்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. குற்றம் சாட்டப் பட்டவர்கள். குற்றம் என்பது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல குடும்பத்தாரையும் பாதிக்கும். ஒரு நீதிபதி அளிக்கும் தண்டனை என்பது விரும்பி எடுக்கும் முடிவு அல்ல. சமுதாயத்தின் நலனுக்கானது. குற்றவாளிகள் சற்று யோசிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு போதும் பழிவாங்கும் எண்ணம் இருக்க கூடாது. உங்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள். இன்று நீங்கள் வரைந்த ஓவியத்தில் இருந்து தொடங்கும் மாற்றம், உங்களுக்கு தெளிவை தரட்டும்.

கல்லும் சிலையும் கற்கள் தான். ஒரு சில அடிகள் வாங்கும் கல் படியாகிறது. உளி தாங்கும் கற்கள் சிலையாகிறது. இன்று முதல் புண்பட்ட உங்கள் மனம் பண்படட்டும். அன்பை விதைப்போம், நற் பண்பை வளர்ப் போம் என்றார்.

இந்த நிகழ்வில், கரூர் கிளைச்சிறை கண்கா ணிப்பாளர் அருணாச்சலம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News