உள்ளூர் செய்திகள்

நொய்யல் ரெயில்வே கேட் பழுது

Published On 2023-10-03 08:24 GMT   |   Update On 2023-10-03 08:24 GMT
  • நொய்யல் ரெயில்வே கேட் பழுதடைந்தது
  • 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக திருச்சி - பாலக்காடு மார்க்கத்திற்கான ரெயில்வே இரும்பு பாதை உள்ளது. இதன் காரணமாக நொய்யலில் 2 ரெயில்வே கேட்கள் உள்ளன. ரயில் வரும் முன் மூடப்பட்டு, ரயில்கள் சென்றவுடன் திறக்கப்படும். இந்நிலையில் நேற்று ரயில் வருவதை முன்னிட்டு ரெயில்வே கேட் மூடப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக ரயில் வந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க, கேட்கீப்பர் முற்பட்டபோது திறக்கவில்லை.

ரயில்வே கேட் திறக்கமுடியாததால் இரு பக்கத்திலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

நொய்யல் குறுக்கு சாலை பகுதிக்கு வந்த வாகனங்களும், வேலாயுதம்பாளையம் வந்த வாகனங்களும் கேட் பழுதடைந்தது குறித்து தகவல் அறிந்து, நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம் பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர் ,நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு ,கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை வழியாக சென்றன.

ரெயில்வே ஊழியர்கள் வந்து மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டுகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராடி கேட்டில் உள்ள பழுதை ஊழியர்கள் நீக்கினர். இதனால் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. ரெயில்வே கேட் பழுதடைந்து, திறக்க முடியாததால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News