உள்ளூர் செய்திகள்

வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய கோரிக்கை

Published On 2022-07-21 09:15 GMT   |   Update On 2022-07-21 09:15 GMT
  • வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உள்ள வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கரூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு கூட்டம் சுங்ககேட்டில் உள்ள கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு உடனடி வேலைகள் குறித்து பேசினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இயற்கையான மரணம் இல்லை என்பதாலும், மாணவி மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் இதுகுறித்து காவல்துறை தீர விசாரிக்க வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த பிரச்சனைக்காகப் போராட வலைதளத்தில் பதிவிட்ட வாலிபர் சங்க கரூர் மாநகரத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட நான்கு பேரை, பசுபதிபாளையம் போலீசார் அதிகாலையில் கைது செய்தது. இந்த செயலை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் ஜனநாயக விரோதமாக இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, எதிர்காலத்தில் பொது பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் ஜனநாயக சக்திகளை கைது செய்யும் போக்கை காவல்துறை கைவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் நலன் காக்கும் அரசு என பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுக அரசு, காவல்துறையின் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்திக் கரூர் மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றிப்பட்டது.

Tags:    

Similar News