உள்ளூர் செய்திகள் (District)

திறனறிவுத் தேர்வில் பள்ளி மாணவி சாதனை

Published On 2023-07-28 06:56 GMT   |   Update On 2023-07-28 06:56 GMT
  • ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சாதனை
  • சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை

 கரூர்

பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவி திறனறிவுத் தேர்வில் சர்வதேச அளவில் 2-ஆம் இடம் பெற்று சாதனை.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என். ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி உதய நிலா சர்வதேச திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இத்தேர்வு நான்கு சுற்றுகளை கொண்டது.மாவட்ட, மாநில, தேசிய அளவிலான முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்று சர்வதேச அளவிலான 4-ஆம் சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இந்தத் திறனறிவுத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான சுற்றில் 2450 மாணவர்களும், மாநில அளவில் 1700 மாணவர்களும், தேசிய அளவில் 900 மாணவர்களும், சர்வதேச அளவில் 400 மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் சர்வதேச அளவில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 9000 மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் திறனறிவுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்று வெற்றிபெ ற்ற ஆர்.என்.ஆக்ஸ்போர்டுபப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவிக்கு கேடயம் பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

வெற்றி பெற்ற மாணவிக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

மேலும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குநர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர், ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கிட்ஸ் பள்ளி முதல்வர், பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News