உள்ளூர் செய்திகள்

கரூரில் சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

Published On 2022-11-06 08:48 GMT   |   Update On 2022-11-06 08:48 GMT
  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி பசுவானுக்கு கனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது
  • இதைப் போல் கிருஷ்ணராயபுரம்.திருக்கண்மல்லிஸ்வரர் கோவில், லாலாப்பேட்டை சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

கரூர் :

கரூர் மாவட்ட அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று சனி பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி பசுவானுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி பெருமானுக்கு நடத்த, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைப் போல் கிருஷ்ணராய புரம்.திருக்கண்மல்லிஸ்வரர் கோவில், லாலாப்பேட்டை சிவன் கோவில், க.பரமத்தி அருகில் புண்னம் உள்ள புன்னைவனநாதர் கோவில், க.பரமத்தி சடையீஸ்வர கோவில், மோளபாளையம் மரகதீஸ்வரர் கோவில் சின்னதாராபுரம் முனி முக்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

Similar News