உள்ளூர் செய்திகள்
கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கு
மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, அந்த ரப்பட்டி, கணக்கம்பட்டி, தேசியமங்கலம் ஆகிய இடங்களில் விவசாயிகள் விளை நிலங்களில் பரவலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போது மாசி மாதம் அறுவடை சீசன் துவங்கப் பட்டுள்ளது. மேலும், கிழங்கு செடிகளில் வளர்ச்சி அடைந்ததால் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு தேவை என்பதால் விவசாயிகள் அறுவடை செய்து உள்ளூர் காய்கறிகள் விற்கும் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள் மகசூல் செய்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.