- மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது
- உற்பத்தி அதிகரித்துள்ளது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் க.பர மத்தி, நொய்யல், மரவாபா ளையம், வேட்டமங்கலம், குளத் துபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மர வள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று அவற் றிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
மேலும், மரவள்ளி கிழங்கு மூலம் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகளை கருவி மூலம் மதிப்பிட்டு, விலை நிர்ணயம் செய்கின்றனர். தற்போது, ஜவ்வரிசி ஆலை உரிமையா ளர்கள், மரவள்ளி கிழங்கு டன் னுக்கு 8 ஆயிரம் ரூபாய்க்கும், சிப்ஸ் தயாரிப்பவர்கள், 9,000 ரூபாய்க்கும் வாங்கி செல்கின்றனர். உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.